முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 20 பேர் உயிரிழப்பு!

Date:

ரஷ்யா, கெமரோவோவில் உள்ள சைபீரியா நகரில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அனைவரும் முதியவர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். அதற்குள் தீ பரவியுள்ளது.

தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் இரண்டாம் தளம் முழுவதும் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சயில் ஈடுபட்டனர். மேலும், கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி இதுவரை 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யா முழுவதும் முதியோருக்கான பல முதியோர் இல்லங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வருவதாகவும், அதிகாரப்பூர்வமாக அவை தனிப்பட்ட சொத்தாக கருதப்படுவதால் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...