இந்தியாவின் தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இலக்கியவாதியுமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய ‘புயலோடு போராடும் பூக்கள்’ என்ற கவிதை நூலின் அறிமுக நிகழ்வு சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 7.30 மணிக்கு ஆனந்தபவன் உணவகம் சையது ஆல்வி சாலை (முஸ்தபா சென்டர் எதிரில்) இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய ‘புயலோடு போராடும் பூக்கள்’ என்ற கவிதை நூல் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது சிங்கப்பூரிலும் நூலின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.