‘முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்’ :புத்தளத்தில் மாபெரும் கவியரங்கு!

Date:

வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய, “CREATE” – (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையின் ஏற்பாட்டில், புத்தளத்தில் மாபெரும் கவியரங்கொன்றை வழங்கவிருக்கின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நிகழ ஏற்பாடாகிவரும் இக்கவியரங்கு, “முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்..!” என்ற கருப்பொருளில் 09 கவிஞர்களின் பிரசன்னத்தில் நடைபெறவுள்ளது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பன்முக ஆளுமைகள் பலகோணங்களில் பகிரப்படவுள்ள இக்கவியரங்கில் பின்வரும் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இந் நிகழ்வு  கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் தலைமையில் நடைபெறும்.

வித்தியாசமான தலைப்புகளில் விழுமிய உணர்வுகள் சுமந்து விரிவான ஏற்பாடுகளுடன் தயாராகிவரும் இக்கவியரங்கம், நிச்சயம் நிறைவான பல படைப்புகளை வெளிக் கொணரவிருப்பதோடு அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக ஒரு திறந்தவெளி அரங்கில் மேடைப்படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...