ஆசிரியையை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்!

Date:

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பாடசாலையில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த போது 6 வயது மாணவன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் ஆசிரியையை நோக்கி சுட்டுள்ளார்.

உடனே துப்பாக்கியால் சுட்ட மாணவனை மற்ற ஆசிரியர்கள் மடக்கி பிடித்த நிலையில். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸா் படுகாயம் அடைந்த ஆசிரியையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை. மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் யாரும் காயம் அடையவில்லை. குறித்த பாடசாலையில் 550 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை சோதனை செய்யும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படாமல் சிலர் மாத்திரமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

விசாரணையில் வகுப்பறையில் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து மாணவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இந்நிலையில் பொலிஸ் காவலில் உள்ள மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு அல் ஹிஜ்ராவில் “Back to school 2025” திட்டம்.

நேற்று (28) டிட்வா சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு 10 அல்...

களுத்துறை மாவட்ட யாத்திரிகர்களுக்கான புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து,...

மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள் மற்றும் கனிம எண்ணெய்...