கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மு.கா தனித்துப் போட்டியிடும்: ரஊப் ஹக்கீம்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார்.

மருதமுனையில் நேற்று (10) நடைபெற்ற கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நடவடிக்கைகள் சம்மந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கட்சி எவ்வாறு தேர்தலில் களம் காண்பது என்பது பற்றியும் இதன்போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது மரச் சின்னத்தில் போட்டியிடும் என்பதனை கட்சியின் தலைவர் பகிரங்கமாக அறிவிப்பு செய்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம் ஹரீஸ், பைசால் காசிம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலி சாஹீர் மெளலானா, கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீட், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...