குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் :வர்த்தமானி வெளியானது!

Date:

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட வர்த்தமானி மூலம் இதனை அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணம் நிறைவேற்றப்படாமை மற்றும் 2020 மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் மற்றும் அமுலாக்க உத்தரவுகளுக்கு இணங்காத காரணத்தினால் குருநாகல் மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் பதவி நீக்கம் 2022 டிசம்பர் 31ஆம் திகதிமுதல் அமுலுக்கு வந்துள்ளதாக ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேயர் பதவி வெற்றிடமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, அதன் கடமைகளை உள்ளடக்கும் பொறுப்பு, பிரதி மேயருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...