‘புதிய வரிகளை நீக்கினால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது’

Date:

விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளை நீக்கினால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அறவிடப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாகவும், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் 1 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியாவிட்டால் இரண்டு வாரங்களுக்கு மேல் நாட்டை நடத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...