ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கூட்டம் இன்று!

Date:

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் மாலை 4.00 மணிக்கு   நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார  திஸாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், 2022 டிசம்பர் 13ஆம் திகதி நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு இந்தக் கூட்டத்தில் எட்டப்படவுள்ளது.

Popular

More like this
Related

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முற்பணம் கொடுப்பனவு!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபா விசேட முற்பணம்...

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4...

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...