இலங்கையிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசர செய்தி

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறுகையில்,

இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு பொருட்கள் தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்க வேண்டும்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு உட்பட அதிகாரிகளிற்கு அவசியமான அழுத்தங்களை உலக சுகாதார ஸ்தாபனம் கொடுக்க வேண்டும்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து நாங்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கும், சுகாதார அமைச்சருக்கும் தெரிவித்து வந்துள்ளோம்.

தாங்க முடியாத அளவிற்கு மருந்துப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனத்தை நாட தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...