சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் ஏனைய நிறுவனங்களிலும் குழப்பங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க இலங்கையின் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மக்கள் அச்சம் மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்தாத வகையில், எல்லா நேரங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவைக் கோருகின்றோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி.ஹேரத்தின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.