கத்தோலிக்க திருச்சபை சுதந்திர தினத்தை புறக்கணித்தது!

Date:

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட கத்தோலிக்க திருச்சபை 75வது சுதந்திர தின விழாவை புறக்கணிக்கவுள்ளது.

பெப்ரவரி 1 ஆம் திகதி நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்டங்களில் கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்த எவரும் பங்குபற்ற மாட்டார்கள் என தெரிவித்தார்.

மேலும், சமூக பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாட்டில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை, கருத்து சுதந்திரம் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் குறைக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...