மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக அவசர சத்திரசிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும், அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்துமாறும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்,
நிலைமையை பரிசீலித்து, சில சத்திரசிகிச்சைகள் சிறிது காலம் தாமதமாகுமா என்று பார்க்குமாறு மருத்துவமனை துறைக்கு அமைச்சகம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பேச்சாளர் சம்மில் விஜேசிங்க, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை, ஆனால் ஒரு சமூக நடைமுறையாக, அனைத்து அவசர சத்திரசிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து வைத்தியசாலைகளும் புற்றுநோய் சத்திரசிகிச்சை, சிசேரியன் பிரசவங்கள் மற்றும் இருதய சத்திரசிகிச்சைகள் போன்ற அவசர சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதாகவும், அவை தொடரும் எனவும் டாக்டர் விஜேசிங்க தெரிவித்தார்.