போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட 10,000 குழந்தைகளின் போஷாக்கு தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நிறுவனங்களும் தனிநபர்களும் வளர்ப்பு பெற்றோர்களாக முன்வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மேலும் 11,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு போசாக்கு தேவைகளை பூர்த்தி செய்யக தனிப்பட்ட முறையில் தலையிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போசாக்கு குறைபாடுள்ள பிள்ளைகளின் வளர்ப்பு பெற்றோராக செயற்படுவதற்கு நாடளாவிய ரீதியில் பல நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜோன் கீல்ஸ் நிறுவனம் 3000 பிள்ளைகளுக்கு பங்களிப்பு செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக, இந்த வேலைத்திட்டத்திற்கு முன்வந்த அனைத்து நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் பதினான்காயிரம் ரூபா வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டு வர்த்தகர்களும் இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.