சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பான, புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் இலங்கை இன்று (17) பங்கேற்கவுள்ளது.
எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய 20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும், தங்கள் சொந்த கடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை, சுரினாம் மற்றும் ஈக்வடார் போன்ற நடுத்தர வருமான நாடுகளின் அதிகாரிகளும் இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில், உலக வங்கி மற்றும் ஜி20 குழுவின் தற்போதைய தலைமையான இந்தியாவால் இணைந்து நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில், இலங்கைக்கு கடனுதவி வழங்குவது குறித்து முக்கிய தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.