பல்கேரியாவில் 18 அகதிகள் சடலமாக மீட்பு: 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில்!

Date:

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகின்றனர்.

குறிப்பாக, துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கண்டெய்னர் லொரி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்று கொண்டிருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றது.

இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருந்த அந்த கண்டெய்னர் லொரியை திறந்து பார்த்தனர். அப்போது, கண்டெயினரில் 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதில், 18 பேர் பிணமாக கிடந்தனர். குழந்தைகள் உட்பட எஞ்சிய 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டெய்னரில் இருந்தவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதிகள் என்றும் அகதிகள் அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயற்சித்தது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அகதிகளை துருக்கி வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய யூனியனுக்குள் கொண்டு செல்ல முயற்சித்தது தொடர்பாக 4 பேரை பல்கேரியா பொலிஸார் கைது செய்தனர்.

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...