27வது ‘மஸ்கட் சர்வதேச புத்தக கண்காட்சி’ ஆரம்பமாகியது!

Date:

ஓமான், மஸ்கட்டில் சர்வதேச புத்தகக் காட்சி  நேற்று (22) தொடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் (04) வரை Oman convention and exhibition centreல் நடைபெறவுள்ளது.

புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று  உள்துறை அமைச்சர் சையத் ஹமூத் பைசல் அல் புசைதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் 32 நாடுகளைச் சேர்ந்த 826 பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன.

அதேநேரம் 260,614 அறபு மொழியிலான நூல்களும் 204,411 பிற மொழியிலான வெளிநாட்டு நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 165 கலாசார நிகழ்ச்சிகளும் 166 சிறுவர் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிகப் பிரமாண்டமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாசிப்பு அருகிவரும் சூழலில் இத்தகைய நிகழ்வுகள் பாராட்டத்தக்கது.

அதிலும் குறிப்பாக அரபு நாடு ஒன்றில் இத்தகைய நிகழ்வு நடைபெறுவதானது வாசிப்புக்கு அந்த சமூகம் கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...