அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வலுவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்தின்படி இன்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ.307.36 சதமாகும். விற்பனை விலை ரூ.325.52 சதமாகும்.
மக்கள் வங்கியின் ஒரு டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 300.29 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதே நேரத்தில், மற்ற வங்கிகளும் இதே விலையில் ஒரு டொலரை வாங்குகின்றன.
இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.307. 36 சதம். விற்பனை விலை ரூ.325.52 சதமாகும்.
நேற்று (08), அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 313.77 சதம். விற்பனை விலை ரூ. 331.05 சதமாகும்.
இதேவேளை மத்தியகிழக்கு நாணயங்களின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளன.