‘அடுத்த வாரமும் பணம் கிடைக்காவிட்டால் தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும்’

Date:

100 மில்லியன் ரூபாவை அடுத்த வாரத்திற்குள் பெற்றுக் கொள்ளாவிட்டால் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம்  தொடர்பான அடிப்படை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குறைந்தபட்சம் அந்த தொகையாவது தேவைப்படுவதாக  ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ள மொத்தத் தொகை 1100 மில்லியன் ரூபா.

முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்கக் கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு  கடிதம் அனுப்பியிருந்தது.

இந்தக் கோரிக்கை அடங்கிய கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர், நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அமைச்சின் செயலாளரும் இது தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகியவை ஒன்றையொன்று மீறினால், கடுமையான அரசியலமைப்பு நெருக்கடி உருவாகும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...