500 மில்.ரூபாய் கிடைக்காவிடின் தபால் மூல வாக்குகளுக்கு புதிய திகதி அறிவிக்கப்படும்!

Date:

எதிர்வரும் புதன்கிழமைக்குள் திறைசேரி 500 மில்லியன் ரூபாயை வழங்காவிட்டால் தபால் மூல வாக்குகளுக்கான புதிய திகதிகளை அறிவிக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக ஏப்ரல் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தபால் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தபால் மூல வாக்குகளை அச்சிடுவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என அரசாங்க அச்சகப் பணிப்பாளர் லியனகேயும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் எதிர்வரும் புதன்கிழமைக்குள் தமது ஆணைக்குழு 500 மில்லியன் ரூபாவை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளாத பட்சத்தில் தபால்மூல வாக்களிப்புக்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மாத இறுதிவரை திறைசேரியிலிருந்து மொத்தம் 1,100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மார்ச் 20 திங்கட்கிழமைக்குள் பணம் கிடைக்காவிட்டால், தாம் நீதிமன்றத்திற்கு சென்று தமக்கான நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்யாதது குறித்து முறையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அச்சிடும் பணிக்காக 533 மில்லியன் ரூபாய் கோரப்பட்ட போதிலும், 339 மில்லியன் ரூபாய் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அதனால் அச்சடிக்கும் பணியை முன்னெடுக்க முடியவில்லை என்று அரச அச்சக பணிப்பாளர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான 2,500 அச்சுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், இதுவரை 54 பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...