சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும்: கல்வி அமைச்சர்

Date:

2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

A/L பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதோ அது O/L பரீட்சையை நடத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும்.

பரீட்சை திணைக்களத்திற்கு இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் குறைந்தது மூன்று மாத இடைவெளி தேவை. எனவே, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடியுமா என்பதை அமைச்சு எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...