இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய நீதிமன்றம் தடை!

Date:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் திகதி நடந்த பேரணியில் மஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணையில் ஆஜராக இம்ரான் கான் விலக்கு கேட்டு இருந்தார்.

ஆனால் அவருக்கு நீதிமன்றம் விலக்கு அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இதற்கிடையே இவ்வழக்கு நேற்று இஸ்லாமாபாத் மாவட்ட  நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது இம்ரான்கானுக்கு நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.

அவரை கைது செய்து வருகிற 29ம் திகதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த  உத்தரவிட்டார். இந்தநிலையில் லாகூரில் இன்று தேர்தல் பேரணி இம்ரான்கான் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இம்ரான் கானை இன்று கைது செய்ய இஸ்லாமாபாத் பொலிஸார் ஹெலிகாப்டர் மூலம் லாகூரில் உள்ள அவரது வீடு அருகே உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு சிறப்பு பொலிஸ் படையினர் இம்ரான்கான் வீடு இருக்கும் சாமர் பார்சி பகுதிக்கு சென்று அவரை கைது செய்ய திட்டமிட்டனர்.

இந்தநிலையில் இம்ரான் கானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் பிடிவாரண்ட்டை ரத்து செய்து இம்ரான் கானை வருகிற 16ம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...