முதல் முறையாக உக்ரைன் போரில் களமிறங்கவுள்ள பெண் சிறைக் கைதிகள்!

Date:

ஆண் இராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த வாரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததையடுத்து ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், இந்த தாமதம் ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஒரு பக்கம் இராணுவ வீரர்களின் அதிகப்படியான உயிரிழப்புகள், மறு பக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் ஆயுத பற்றாக்குறை போன்றவை ரஷ்யாவை தொடர்ந்து நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது.

இதற்கிடையில் இராணுவ வீரர்களின் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய சிறைக் கைதிகளை போர் களத்தின் முன்வரிசைக்கு அனுப்பி வருகிறார்.

இவ்வாறு போரில் களமிறங்குவதற்காக அவர்களின் சிறைத் தண்டனை குறைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் முனைக்கு அனுப்பப்படும் பெண் கைதிகளை ரஷ்ய வீரர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக வழங்கல் துறையின் பணிகளுக்கு பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல்வேறு கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்ற கைதிகளை உக்ரைன் போர் முனைக்கு அனுப்ப ரஷ்ய அரசாங்கம் முடிவு செய்தது.

இதன்படி, போர் முனைக்கு செல்லும் கைதிகளின் சிறைத்தண்டனை இடைநிறுத்தப்பட்டு 06 மாத சேவையின் பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...