ரமழான் மாதத்தில் இளம் வயதினரின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஆன்மீக ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் நாஸ் கலாச்சார நிலையம் 7 நாள் வதிவிட பயிற்சிப் பாசறையொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது.
பல தலைப்புகளில் மிகச்சிறந்த வளவாளர்களால் விரிவுரைகள் நடத்தப்படவுள்ளது.
அதற்கமைய, ஆண் பிள்ளைகளுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வரை இந்த பயிற்சி பாசறை இடம்பெறும்.
மேலும், பெண் பிள்ளைகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெறும்.
அதேபோல பாதுகாப்பான இஸ்லாமிய சூழல், தரமான வளவாளர்கள், சகல வசதிகளுடன் கூடிய தங்குமிட வசதிகளுடன் இந்த பயிற்சி பாசறை நடைபெறவுள்ளது.
இதேவேளை இளம்பராயத்தினரை விழிப்புணர்வூட்டி, மார்க்க பற்றுடையவர்களாகவும், வருங்கால இஸ்லாமிய தலைவர்களாகவும் மாற்றி அமைக்கும் எமது இப்பணிக்கு பெற்றோர்கள் முன்னுரிமையளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
ரமழான் விடுமுறையில் இருக்கும் பிள்ளைகள் உறக்கத்திலும், வீணான விடயங்களிலும் நேரத்தை கழித்து விடக்கூடாது என்ற நல்லெண்ண நோக்கத்துடன் இந்த ரமழான் மாத விசேட ஆன்மீக வதிவிட பயிற்சிப் பாசறை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சிப் பாசறையில் உங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பினால் பின்வரும் தொலைபேசி எண்களுடன் தொடர்புகொள்ளுங்கள்
0770670551
0112084814
0770521119