ரயிலில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதிக்கு திருமணம் செய்து வைக்க நீதிமன்றம் உத்தரவு

Date:

ரயிலின் மலசலகூடத்திலிருந்து மீட்கப்பட்ட சிசுவை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டுள்ளார்.

பிணை வழங்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களான இளம் தம்பதியினருக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னரே அவர்கள் விளக்கமறியலில் வைக்கத் தயாராக இருப்பதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி லக்ஷான் டயஸின் தெரிவித்த கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்..

டி.என்.ஏ அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக குழந்தை மற்றும் சந்தேகநபர்களை எதிர்வரும் 21ம் திகதி காலை 9 மணிக்கு அரசு பரிசோதகர் முன் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்தோடு குறித்த  தம்பதிகளை தலா 5 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...