டொலர் நெருக்கடி முடிந்துவிட்டது: மத்திய வங்கி ஆளுநர்

Date:

டொலர் நெருக்கடி தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும், நாட்டின் அத்தியாவசியத் துறைகளுக்கு போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிணை எடுப்புப் பொதியின் வரவிருக்கும் ஒப்புதல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் அதேவேளை நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

கலாநிதி நந்தலால் வீரசிங்க, IMF வாரியம் நாளை (திங்கட்கிழமை) இலங்கைக்கான கடனை முறைப்படி அங்கீகரிக்க உள்ளதாகவும் கிட்டத்தட்ட 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் தவணையாக வழங்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இணையவழி வெறுப்புப் பிரசாரம்: இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான அலை!

"அறியாமையால் உருவாகும் தவறான புரிதல் பயத்தை வளர்க்கிறது, பயமே அமைதியின் மிகப்...

‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களுக்கு அனுமதி இல்லை’; நல்லூரில் திலீபன் சிலை அகற்றப்பட்டது குறித்து அமைச்சர் நளிந்த.

யாழ்ப்பாணம், நல்லூர் திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ...

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு...

பாடசாலைகளுக்கு அதிவேக Fiber இணையத்தள வசதி

நாடு முழுவதிலுமுள்ள 3700 பாடசாலைகளை கேந்திரமாகக் கொண்டு அதிவேக Fiber இணையத்தள...