இலங்கை தமிழர்களுக்கு ரூ.223 கோடி செலவில் 3949 வீடுகள் கட்டப்படும்: தமிழக வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிப்பு

Date:

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பட்ஜெட் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில்இ பட்ஜெட் தாக்கலில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது திராவிட மாடல் ஆட்சி வெற்றி நடைபோட்டு வருகிறது. இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளோம். மொழிப்போர் தியாகி தாளமுத்துஇ நடராஜருக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும். அம்பேத்கரின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.

கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும். 711 தொழில் நிறுவனங்களில் 8 இலட்சம் தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் செயல்படுத்தப்படும்.

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் ரூ.223 கோடி செலவில் கட்டப்படும். சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் தஞ்சையில் சோழர் அருங்காட்சியம் அமைக்கப்படும்.

மாநிலம் முழுவதும் 25 பகுதிகளில் நாட்டுப்புற பயிற்சி மையம் அமைக்கப்படும். வருவாய் பற்றாக்குறையை ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளோம் என இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...