சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி பாராளுமன்றத்தில் தோற்கடிப்பு

Date:

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது முன்வைக்கப்படாது எனவும் அவைத்தலைவர் தெரிவித்ததையடுத்து சபையில் காரசாரமான சூழ்நிலை ஏற்பட்டது.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதற்கான பிரேரணையை பேரவையில் சமர்ப்பித்து இன்றே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் தீர்மானத்திற்கு எதிராக 113 வாக்குகளைப் பெற்று வர்த்தமானி அறிவித்தலுக்கு ஆதரவாக சந்திம வீரக்கொடி எம்.பி மாத்திரம் வாக்களித்த நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானித்தார்.

அதன்படி சட்டக் கல்வி தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நிராகரிக்கப்பட்டது.

Popular

More like this
Related

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்,...

ரஷ்யாவில் நடைபெற்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை நிறைவு செய்து இலங்கை இராணுவ அணி நாடு திரும்பியது!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய ஆயுதப்படைகளுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு பயங்கரவாத...