தினசரி நீரைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு சொட்டு நீரையும் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாதா கூறுகையில்,
நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது நீர் நுகர்வு குறைவாக இருந்த நிலையில், தற்போது நீர் நுகர்வு அதிகரித்துள்ளது.
இன்று உலக தண்ணீர் தினம். இந்த ஆண்டு கருப்பொருள் “தண்ணீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு விரைவான அணுகுமுறை”.
நாட்டில் பெறுமதிமிக்க நீர்நிலைகள் காணப்படுகின்ற போதிலும் மனித செயற்பாடுகளினால் நீர் வளங்கள் தொடர்ந்தும் மாசடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.