மனித வாழ்வில் ஒரு செய்தியை மக்கள் மத்தியிலும் அவர்களின் உள்ளத்திலும் விதைக்க பரவலாக கலைகள் மூலமே பகிரப்படுகின்றன.
அதேபோல கொள்கைளை மக்கள் மனதில் பதிவதற்காக பல்வேறு கருத்து மாற்றங்களையும் பண்பாடுகளையும் வெளிப்படுத்த கலைகள் பங்களிக்கின்றன.
அனைத்து இறையியலாளர்களின் தத்துவமும் விடுதலையின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. பெருநாள் கொண்டாட்டம் உட்பட இஸ்லாமிய தத்துவத்தில் அந்த மார்க்கத்தின் நம்பிக்கைகளை நாம் நீண்ட காலமாகக் கண்டு வருகிறோம்.
அது சொல்லும் செய்தியை, சமூக நல்வாழ்வுக்கு பிரயோகிப்பதன் மூலம் பரஸ்பர புரிதலின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. இது மதங்களுக்கு இடையிலான சமூக, கலாசார புரிதலை உறுதிப்படுத்துகிறது.
அந்த வகையில் உதயமாகியுள்ள ரமழான் மாதத்தில் இனிய குரலில் மூலம் இந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த பாடகர் முஸ்லிம் வாழ்வியல் நடைமுறைகளையும், வழிபாடுகளையும், கலாசாரங்களையும் அழகாக சினிமா பாடல்களின் பாணியில் படியுள்ளார்.