இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பரிசோதிக்க நடவடிக்கை

Date:

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் மாதிரிகள் ஆய்வகங்களில் பரிசோதிக்க அனுப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்களைக் கண்டறிவதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக பணிப்பாளரும் வைத்தியருமான ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

இந்த சோதனைகள் பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் நான்கு நாட்களுக்குள் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அறிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாவிட்டால், கையிருப்பு முட்டைகளை சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் முட்டை விலைக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...