எதிர்காலத்தில் பஸ் கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படும், இப்போது போக்குவரத்து கட்டணத்தை குறைக்கலாம். ஏனெனில் மாற்று விகிதம் நிலையாக இருந்தால், டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் அளவு குறைந்தால், நமது எரிபொருள் செலவு குறையும்.
இதேவேளை பிற உதிரி பாகங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு குறைந்த செலவின் பலனை மக்களுக்கு வழங்க முடியும்.
இதேவேளை, விலை சூத்திரத்திற்கு ஏற்ப பஸ் கட்டணம் குறைக்கப்படும். விலை சூத்திரத்துக்கு அமைய, விலை குறையும் போது, வாடிக்கையாளர் குறைவின் பலனைப் பெறுவார்.மேலும், உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது, கட்டணம் அதிகரிக்கப்படும்” என்றார்.