(Photos: Aljazeera)
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய முஸ்லிம் மக்கள்தொகையின் தாயகமாகும், ஏறத்தாழ 200 மில்லியன் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக பெரும்பான்மையான இந்து நாட்டில் வாழ்கின்றார்கள்.
பியூ (PEW) ஆராய்ச்சி மையத்தின் புதிய மதக் கணிப்புத் தரவுகளின்படி, எதிர்வரும் தசாப்தங்களில் உலகின் இரண்டு பெரிய மதங்களான – இந்து மதம் மற்றும் இஸ்லாம் – மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட பெருமையை இந்தியா பெறவுள்ளது.
அதற்கமைய 2050 ஆம் ஆண்டில், நாட்டில் 311 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உலக மொத்தத்தில் 11 சதவீதமாகும்.
இந்த ரமழான் மாத்தில் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் சமூக மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்களின்படி புனித மாதத்தின் வருகையை கொண்டாட ஒன்றிணைந்து, ரமழானுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளித்துள்ளனர்.
தீவிர பிரார்த்தனை, சுய ஒழுக்கம், விடியற்காலை முதல் மாலை வரை நோன்பு மற்றும் இரவு விருந்துகளுடன் இஸ்லாமியர்கள் அனுஷ்டிக்கின்றனர்.
இந்தியாவில் இஸ்லாமியர்கள் ரமழானை எப்படிக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை இந்த புகைப்படங்களில் கொண்டு வர, சர்வதேச ஊடகமான அல் ஜசீரா ஊடகம் பழைய முஸ்லிம் சுற்றுப்புறங்கள், வரலாற்று மசூதிகள், மற்றும் சந்தைகளுக்குச் சென்றுள்ளது.