(Photos: Ali Jadallah/AA)
புனித ரமழான் மாதத்தில், உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த பாரம்பரிய சடங்குகள் உள்ளன.
அந்தவகையில், முஸ்லிம்கள் தங்கள் தினசரி நோன்பை ஆரம்பிப்பதற்கு விடியற்காலை நெருங்கும் போது, முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதத்தில் ஒரு பழக்கமான கோஷம் எழுப்புவது காஸாவில் கடைப்பிடிக்கப்படுகின்றது.
காசாவில் ரமழான் டிரம்மர்களின் பாரம்பரியத்தைத் தொடரும் மூன்று பேர் கொண்ட குழு, ரமழானுக்கான தினசரி நோன்பு தொடங்குவதற்கு முன்பு அதிகாலையில் உண்ணப்படும் சஹருக்கு மக்களை எழுப்ப தெருக்களில் சுற்றித் திரிகிறது.
முசாஹரதி என்றும் அழைக்கப்படும், டிரம்மர்கள் பாரம்பரியமாக முகக்கவசங்களை அணிந்துகொண்டு, டிரம்ஸ் அடித்து, ரமழான் பாடல்களைப் பாடுகிறார்கள்.
பலஸ்தீனிய நகரங்களில் அலாரம் கடிகாரங்கள் இருந்தபோதிலும் இந்த பழமையான பாரம்பரியம் இன்னும் தொடர்கிறது.
இதேவேளை டிரம்மர்களின் மெல்லிசை முழக்கங்கள் மற்றும் டிரம் ஓசைகள் ரமழானின் ஆன்மீக சூழலை சேர்ப்பதுடன் மேலும் நோன்பு அனுபவத்தை மேலும் சிறப்பானதாக்குகிறது.