இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சை ஆர்.எஸ்.எஸ் கைவிடவில்லை: முஸ்லிம் தலைவர்கள் வேதனை!

Date:

முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து அவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்களின் தொடர் தாக்குதல்கள் குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தி முக்கிய முஸ்லிம் அறிவுஜீவிகள் மற்றும் தலைவர்கள் தீவிர இந்து அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்த முஸ்லிம் அறிவுஜீவிகள் மற்றும் தலைவர்கள் குழு, இந்துத்துவா அமைப்புகளின் தொடர்ச்சியான வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதது குறித்து ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளது.

குறித்த கடிதத்தில், இனப்படுகொலைக்கான அழைப்புகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் உள்பட வெறுப்பு பேச்சுக்களை ஆர்.எஸ்.எஸ். இன்னும் கைவிடவில்லை.

மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரில் சமீபத்தில் முஸ்லிம் எதிர்ப்பு அணிவகுப்புகள் வெறுப்பு நிறைந்தவை, மேலும் முஸ்லிம் வணிகங்களை புறக்கணிப்பதற்கான அழைப்புகளை உள்ளடக்கியதாகவும் முஸ்லிம் தலைமைகள் குழு கூறியது.

அதேவேளை இந்த பேரணிகள் மற்றும் பேச்சுக்கள் பொலிஸ் முன்னிலையில் நடந்ததாகவும் எந்த நடவடிக்கையும் இன்றி செயலற்றதாக இருந்தது, இது முஸ்லிம்கள் மத்தியில் வேதனையையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

மேலும், கூட்டங்களுக்குப் பிறகும், சங்கம் மற்றும் பா.ஜ.கவினர் முஸ்லிம்களைக் குறிவைக்கும் சம்பவங்கள் குறையவில்லை.

பகவத், இந்திய யூனியன் அரசாங்கம் மற்றும் மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களை கண்டிப்பதில் ‘அதிகமாக பேச வேண்டும்’ என்று குறித்த கடிதத்தில் முஸ்லிம் தலைவர்களின் குழு கோரியுள்ளது.

இதேவேளை, டெல்லி முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.வை. குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா (ஓய்வு), ராஷ்டிரிய லோக்தளம் தேசிய துணைத் தலைவர் ஷாஹித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் முஸ்லிம் பிரதிநிதிகளில் அடங்குவர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...