கிரீஸ் நாட்டில் வருகின்ற மே மாதம் பொதுத் தேர்தல்!

Date:

கிரீஸ் நாட்டில் வரும் மே 11-ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான கிரீஸில் வலதுசாரி கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சி உள்ளது. அக்கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ளார்.

முன்னாள் பிரதமர் கான்ஸ்டான்டைன் மிட்சோடாகிஸின் மகன் இவர். கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவியேற்றது முதல் இவரது ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தொலைபேசி உரையாடல்கள் அரசு பாதுகாப்பு சேவை அமைப்பால் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை மற்றும் கடந்த மாதம் நிகழ்ந்த மிகப் பெரிய ரயில் விபத்து ஆகியவற்றால் அரசாங்கம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி 28-ம் திகதி வடக்கு கிரீஸில் நிகழ்ந்த மிகப் பெரிய ரயில் விபத்தால் 57 பேர் உயிரிழந்தனர்.

இது நாடு முழுவதும் அரசாங்கத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தியது. ரயில்வே நெட்வொர்க் சேவையை அரசாங்கம் சரிவர கவனிக்காததே இதற்குக் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அரசின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், அரசாங்கத்திற்கு செல்வாக்கு குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

நாட்டின் பிரதான இடதுசாரி எதிர்க்கட்சியான சைரிசாவைவிட அரை முதல் 4 புள்ளிகள் வரை மட்டுமே ஆளும் புதிய ஜனநாயக் கட்சிக்கு கூடுதலாகக் கிடைத்துள்ளது. தனது ஆட்சிக்கு செல்வாக்கு குறைந்திருப்பதை அடுத்து, வரும் மே 21-ம் திகதி பொதுத் தேர்தலுக்கு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், ”நாட்டிற்கு தெளிவான தீர்ப்பு தேவை. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் துணிச்சலாகவும், குறைவான சமரசங்களுடனுமே ஆட்சி செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், தேர்தல் நடைபெற்றாலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என செய்திகள் கூறுகின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...