உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 50 நாட்களாக தாமதம் !

Date:

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது சுமார் 50 நாட்களாக தாமதடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் முன்வராமையே இதற்கு காரணமென திணைக்களம் கூறியுள்ளது.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் கலந்துகொள்வது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டு பணிகளுக்காக சுமார் 5000 ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியமெனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான பின்புலத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைந்துள்ளமையினால், சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதிலும் சிக்கல் நிலைமை காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...