ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட ஓகொடபொல உடுகொட கிளையினால் உலமாக்களுக்கான ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட ஓகொடபொல உடுகொட கிளையினர் ஏற்பாடு செய்த பிரதேச உலமாக்களுக்கான ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும் ஓகொடபொல மஸ்ஜிதுல் பலாஹில் கடந்த 09 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் பல மூத்த உலமாக்களும் இளம் உலமாக்களும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் தலைமையுரையுடன் புதிய நிர்வாக சபை அறிமுகம், உலமாக்கள் பரஸ்பர அறிமுகம், சபையோர் கருத்துக்கள் என்பன இடம் பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதேசத்தில் உள்ள ஐந்து ஜும்ஆப் பள்ளிவாயல்களின் நிர்வாக சபை உறுப்பினர்களில் தலா இருவர் வீதம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தலைவர்  தனதுரையில் உலமாக்களின் பொறுப்பையும் உலமாக்களும் பள்ளிவாயல்களும் இணைந்து தொழிற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உலமாக்களுக்கும் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் குறிப்பாக நிகழ்ச்சிக்குப் பூரண அனுசரணை வழங்கிய அல்ஹிமா இஸ்லாமிய சேவை நிலையத்திற்கும், பள்ளிவாயலில் அனுமதி வழங்கிய ஓகொடபொல பள்ளிவாயல் நிர்வாகத்திர்க்கும், உணவு ஏற்பாடுகளைச் செய்த ஓகொடபொல உலமாக்களுக்கும் இளைஞர்களுக்கும் ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுவினர் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என கஹட்டோவிட   தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...