யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது சேதன புளி வாழைப்பழங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 25,000 கிலோ சேதன புளி வாழைப்பழங்கள் முதல் ஏற்றுமதி தொகுதியாக இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 600 விவசாயிகள் புளி வாழை செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மேலும் 650 ஹெக்டேயருக்கு பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் ராஜாங்கனையில் பயிரிடப்பட்ட புளி வாழைப்பழங்கள் 18 தடவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதிப் பங்களிப்பின் கீழ் புளி வாழை ஏற்றுமதி வலயங்களை நிறுவுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.