எம்பிலிப்பிட்டியவில் பயங்கர விபத்து: 15 பேர் படுகாயம்!

Date:

எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (15ஆம் திகதி) மாலை 4.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 6 குழந்தைகள், 4 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...