வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு!

Date:

எதிர்வரும் 25ஆம் திகதி  வடக்கு, கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் சின்னங்கள், நில ஆக்கிரமிப்பு, மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

நில ஆக்கிரமிப்பு மற்றும் தொல்பொருளை பாதுகாக்கும் பெயரில் இடம்பெறும் பௌத்த மயமாக்கலை கண்டித்து இந்த போராட்டத்துக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 25ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய நாளில் நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...