IMF நிதி வசதிக்கான பாராளுமன்ற அனுமதியைப் பெற அமைச்சரவை ஒப்புதல்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்காக பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் மார்ச் 22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடன்வசதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்வதற்கும், குறித்த கடன் வசதிக்குரிய ஏற்புடைய பிரதான கொள்கை வகுப்புக்களில் உட்சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி செயற்பாடுகளுக்காக பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...