இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச வீதி வரைபடத்திற்கும் காலவரையறைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
சீர்திருத்த செயலகத்தை நிறுவுவதற்கும் அபிவிருத்தி முகவர்களிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவற்றிலிருந்து இந்த செயல்முறைக்கு உதவி பெறப்படும்,
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் இதனை நிறைவு செய்ய நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.