ஹைபிரிட் சூரிய கிரகணம் இன்று: 400 வருடங்களுக்குப் பிறகு தென்படுகிறது!

Date:

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் இன்றைய தினம் தென்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் அரிய சூரிய கிரகணத்தை அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் கண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இந்த கிரகணம் தெளிவாக தெரிந்துள்ள போதும் இலங்கையில் தென்படவில்லை.

சூரிய குடும்பத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது.

முழு கிரகணம், பகுதி கிரகணம், வளைய கிரகணம், வளைய மற்றும் முழு கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என நான்கு வகையான சூரிய கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அதன்படி, 400 வருடங்களுக்குப் பிறகு மிகவும் அரிதான கலப்பின சூரியகிரகணம் இன்று நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...