புத்தகம் தின வரலாறு
யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாள், 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களையும், ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.
புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் மற்றொரு கவனிக்க தகுந்த விஷயமாக உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக அமைந்துள்ளது.
மனித சமூகத்தில் அறிவு வளர்ச்சியின் கருவியே புத்தகங்கள் என பார்க்கப்படுகிறது. பொதுவாக மனிதன் வளர்ச்சியில் பெரும்பாலான தகவல்களை மரபணுவே கடத்தி விடுகிறது.
ஆனால் மனிதன் தன் வாழ்நாளில் கற்று தெரிந்து கொண்ட விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த செய்த முயற்சி தான் ஓலைச்சுவடி, செப்பேடுகள், என படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது புத்தகங்களாக வளர்ந்து நிற்கிறது.
இப்படி ஆரம்பித்த முயற்சியால் தான் இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான புத்தகங்கள் மனிதர்களின் கைகளில் தவழ்கின்றன.
இந்நிலையில் 2023 உலக புத்தக தினம் “சுதேசி மொழிகள்” என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீம் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும் இலக்கியம் மற்றும் கதைசொல்லலில் உள்நாட்டு மொழிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
கணிசமான அறிவு, ஞானம் மற்றும் தனித்துவமான கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பதால், அடிக்கடி அழிந்துபோகும் அல்லது அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கும் பழங்குடி மொழிகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
இந்நிலையில் நாம் அனைவரும் பிறந்த நாள், திருமண நாளை கொண்டாடுவதை போல் உலக புத்தக தினத்தை கொண்டாடும் வகையில் புத்தகங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ச்சியடையலாம்.
அந்த வகையில் இந்த ஆண்டு புத்தகங்களை பரிசளிப்பவர்களுக்கும், பெற்றுக்கொள்வர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் ஹெச்டி தமிழ் வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.