சூடானில் 72 மணித்தியால போர் நிறுத்தம் !

Date:

சூடானில் நேற்று நள்ளிரவிலிருந்து 72 மணித்தியால போர் நிறுத்தத்திற்கு மோதலில் ஈடுபடும் தரப்பினர் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன்(Antony Blinken0 தெரிவித்துள்ளார்.

சூடானிய இராணுவம் மற்றும் RSF எனப்படும் துணை இராணுவப் படை ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று 48 மணித்தியாலங்களின் பின்னர் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் இந்த மாதம் மோதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் அறிவிக்கப்படும் மூன்றாவது போர் நிறுத்தமாக இது அமைந்துள்ளது.

இந்த மோதல்கள் காரணமாக 400 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தமது இராஜதந்திரிகள் மற்றும் பிரஜைகளை வௌியேற்றும் நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...