கோட்டாவுக்கு மாதாந்தம் செலவாகும் பணம் எவ்வளவு தெரியுமா?: RTI மூலம் வெளியாகிய உண்மை!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணையில் ஜனாதிபதி அலுவலகம் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதற்கமைய, செய்தி நிறுவனம் இந்த தகவல் கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை வெளியிட்ட தகவல் அதிகாரி, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 9,91,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம், தண்ணீர் மற்றும் ஏனைய செலவுகளுக்கு 3,38,387.60 ரூபாய் செலவிட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...