இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்துள்ளது.
குறைந்தது 78 பேரை ஏற்றிச் சென்ற விரைவுப் படகு நீரில் மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
காணாமல் போன ஒன்பது பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.
படகு புறப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மரத்தில் மோதியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.
17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு விபத்து அடிக்கடி நடைபெறும்.
2018 ஆம் ஆண்டில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஆழமான ஏரியில் சுமார் 200 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 167 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.