வெசாக் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் விவகார திணைக்களத்தின் இன நல்லிணக்க நிகழ்வு புத்தளத்தில்..!

Date:

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமச்சின் கீழ் இயங்கும் சகல மதங்களின் திணைக்களங்களும் இணைந்து இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு புத்தளத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

அந்தவகையில் இந்து, கிறிஸ்தவ திணைக்களத்தைப் போன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் முதற் தடவையாக, புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்வுகளில் முதல் நிகழ்வாக, நேற்று புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் புத்தளம் பெரிய பள்ளிவாசல், அஹதிய்யா மாணவர்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள், உலமாக்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆப்தீன் முஹமட் பைஸல் மற்றும் உதவிப் பணிப்பாளர் அலா அஹமட் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

இதன் போது பஹன மீடியா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ,சமன் புஷ்ப லியனகேவால் மொழி பெயர்க்கப்பட்ட “சந்த தெக்கட்ட சந்த” நூல் பௌத்த மத்திய நிலையத்தின் விகாராதிபதி உடுபாதன குசல தம்ம தேரருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...