தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்: இராணுவம் குவிப்பு!

Date:

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தையிட்டி விகாரையை சூழவுள்ள வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், உழவு இயந்திரங்களில் முட்கம்பிகள், வீதி தடை கம்பிகள் என்பவற்றை வீதிகளில் போட்டு, வீதி தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

அதேவேளை பெருமளவான இராணுவம் துப்பாக்கிகளுடன் விகாரையை சூழவுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோதமாக தையிட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் விகாரையை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மருந்து உணவுப்பொருட்கள் என்பவற்றை உள்ளே கொண்டு வருவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என்றும் கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் அவர்களிடம் கூறியுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...