எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல்சார் பேரழிவு தொடர்பில் அடுத்த வாரம் பாராளுமன்றில் விவாதம்!

Date:

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல்சார் அனர்த்தம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இம்மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன்படி, காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற உள்ளது. இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.

செவ்வாய்கிழமையன்று, விசேட பொருட்கள் வரிச் சட்டத்தின் கீழ் எட்டு உத்தரவுகள் உட்பட பல சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...